search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு கத்திக்குத்து"

    சிகரெட் புகையை முகத்தில் ஊதிய தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராயபுரம்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் அஸ்லாம் (25). இவர் சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பின்னர் அவர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள நண்பரை பார்க்க வந்தார்.

    இருவரும் ஒரு கடையின் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அஸ்லாம் புகை பிடித்தார். அந்த புகை அருகே நின்ற அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் முகத்தில் பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்லாமை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    முதுகு, இடுப்பில் பலத்த காயம் அடைந்த அஸ்லாமுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிது.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே மதுகுடிக்கும் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது28). இவரும் அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி (45), வினோத்குமார்(25) மற்றும் ராகுல் (19) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 4 பேரும் நேற்று மாலை தொண்டமாநத்தம் எஸ்.எஸ். நகரில் மதுகுடித்தனர். அப்போது திடீரென கிருஷ்ணனுக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பழனி உள்பட 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பழனி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளை மோதுவது போல் சென்ற தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது நண்பர் முகமது சலீம்(29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ராஜா நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த கனகராஜ்(29) என்பவர், மணிகண்டன் மீது மோதுவது போல் சென்றார்.

    இதனால் மணிகண்டனும் முகமது சலீமும் கனகராஜிடம் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகராஜ் தனது நண்பர் சதீசுடன்(28) சேர்ந்து மணிகண்டனையும், முகமது சலீமையும் தாக்கினார். அப்போது அவர்களும் கனகராஜ், சதீஷ் ஆகியோரை தாக்கினர். இதற்கிடையே கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி கனகராஜ், சதீஷ் மற்றும் முகமது சலீம் ஆகியோரை கைது செய்தனர்.

    ×